Sunday, November 3, 2013

SUPDT OF POST OFFICES, PUDUKKOTTAI

 


                                                         Shri.  S.A. MUJEEB BASHA
  
   HAS JOINED AS  
SUPDT OF POST OFFICES, 
  PUDUKKOTTAI DIVISION 
   ON 
                                                                       4th  NOVEMBER 2013 F/N.

     ON BEHALF OF ALL STAFF OF PUDUKKOTTAI DIVISION, 
WE WELCOME OUR NEW SP SIR

Wednesday, September 25, 2013

Prime Minister Approves the Constitution of Seventh Central Pay Commission

FM: Prime Minister Approves the Constitution of Seventh Central Pay Commission; Recommendations are Likely to be implemented with effect from 1st January, 2016 


                                  The Finance Minister Shri P.Chidambaram in a statement said here today that the Prime Minister has approved the constitution of the Seventh Central Pay Commission.
            The fourth, fifth and sixth Central Pay Commissions’ recommendations were implemented as follows:

4th CPC                       1.1.1986
5th CPC                       1.1.1996
6th CPC                       1.1.2006

            The average time taken by a Pay Commission to submit its recommendations has been about two years.  Accordingly, allowing about two years for the 7th CPC to submit its report, the recommendations are likely to be implemented with effect from 1.1.2016.

            The names of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the 7th Pay Commission will be finalised and announced shortly after consultation with major stakeholders.
*****
Source : PIB (Release ID :99644) 

Friday, September 20, 2013

Govt approves 10 per cent DA hike

Govt approves 10 per cent DA hike, to benefit 50 lakh central employees

NEW DELHI: The government today approved a proposal to hike dearness allowance to 90 per cent from existing 80 per cent, a move that would benefit about 50 lakh central government employees and 30 lakh pensioners.

"The Union Cabinet approved the proposal to increase dearness allowance to 90 per cent at its meeting here. The hike would be effective from July 1, this year," a source said.

According to the source, the increase in DA to 90 per cent would result in additional annual expenditure of Rs 10,879 crore. There would be additional burden of Rs 6,297 crore on exchequer during 2013-14 on account of this hike in DA.

This is a double digit hike in DA after about three years. It was last in September, 2010, that the government had announced a hike of 10 per cent to be given with effect from July 1, 2010.

DA was hiked to 80 per cent from 72 per cent in April, 2013, effective from January 1, this year.

As per the practice, the government uses CPI-IW data for past 12 months to arrive at a number for the purpose of any DA hike.

The retail inflation for industrial workers between July, 2012 and June 2013 was used to compute the increase in DA.

Tuesday, September 3, 2013

POSTAL SAVINGS BEST INVESTMENT- NAANAYAM VIKATAN ARTICLE


நிலையான வருமானத்துக்கு அஞ்சலக சேமிப்பு முதலீடுகள் !

'’பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் சற்று ரிஸ்க் இருப்பதால் தொடர்ந்து அதைக் கண்காணிக்க முடியாதவர்களுக்கும், நிலையான வருமானமும் முதலீட்டு அசலுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்பவர்களுக்கும் அஞ்சல் நிலைய முதலீட்டுத் திட்டங்கள் பொருத்தமானவையாக இருக்கும்.
இன்று பங்குச் சந்தை இறக்கம், ரூபாய் மதிப்பு சரிவு என்று இருக்கும் நிலையில் தங்களின் போர்ட்ஃபோலியோவில் ஒரு பகுதியை அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். மேலும்,  சில திட்டங்களுக்கு வரிச் சலுகை இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். இந்தத் திட்டங்கள் என்ன என்பது குறித்து சென்னை தலைமை
அஞ்சல் அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்  மெர்வின் அலெக்ஸாண்டரிடம் பேசினோம். அவர் தந்த விவரங்கள் இங்கே உங்களுக்காக...
''அஞ்சலகங்கள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இவற்றில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 100 சதவிகித பாதுகாப்பு உண்டு. மேலும், சில சேமிப்புத் திட்டங்களில் வரிச் சலுகையும் இருக்கின்றது. அதோடு, அஞ்சலகத்தில் தொடங்கும் கணக்குகளை வேறு அஞ்சலகங்களுக்கும் எளிதாக மாற்ற முடியும். இன்றைய நிலையில் இந்தியா முழுவதுமாக 1.53 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் நடைமுறையில் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 12,000 அஞ்சல் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்தியா முழுவதுமான மொத்த அஞ்சலக டெபாசிட்கள் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளன.

அஞ்சலகத்தில் மக்கள் டெபாசிட் செய்யும் பணத்தை நாட்டின் வளர்ச்சியில் அரசாங்கம் முதலீடு செய்வதால், மொத்த சமுதாயத்திற்கும் அதிக பலன் கிடைக்கிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாக வங்கிகளைப் போலவே ஏ.டி.எம்., இன்டர்நெட் பேங்கிங் போன்ற வசதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன'' என்றவர், அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், எந்த திட்டங்களுக்கு வரிச் சலுகை இருக்கிறது என்பது பற்றியும் விளக்கினார்.
மன்த்லி இன்கம் ஸ்கீம்!
இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானம் பெறலாம். ஓய்வு பெற்றவர்களுக்கும் முதியோருக்கும் இத்திட்டம் ஏற்றது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.4 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டம் ஐந்து ஆண்டுகள் காலவரையறை கொண்டது. இத்திட்டத்தில் ஒருவர் தனியாக கணக்குத் தொடங்கினால்  குறைந்தபட்சமாக 1,500 ரூபாயும், அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாய் வரையும் ஜாயின்ட் கணக்கில் 9 லட்சம் ரூபாய் வரையும் முதலீடு செய்ய முடியும்.
ஒருவர் எத்தனை சேமிப்பு கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். மாத வருமானம், ஒருவருடைய அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். முதிர்ச்சிக்கு முன்பாகவே டெபாசிட்டை எடுத்தால் வட்டியில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் கழிக்கப்படும். இந்தச் சேமிப்பு திட்டத்திற்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது.
அஞ்சலக டைம் டெபாசிட் (டிடி) ஸ்கீம்!
இத்திட்டத்தில் ஒருவரோ அல்லது இருவரோ இணைந்து கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் 1, 2, 3, 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.  இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.20-லிருந்து 8.40 சதவிகித வட்டி கிடைக்கும். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். ஐந்து ஆண்டு திட்டத்திற்கு மட்டும் 80-சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு.  
குறைந்தபட்சமாக ரூ.200 முதல் நம்மால் முடிந்த அளவு முதலீடு செய்யலாம். இந்தச் சேமிப்பு கணக்கைத் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகோ அல்லது ஒரு வருடத்திற்கு முன்போ குளோஸ் செய்தால் அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு தரும் 4% வட்டி மட்டுமே கிடைக்கும்.
நேஷனல் சேவிங்ஸ் சர்ட்டிஃபிகேட்!
மாத வருமானம் பெறுவோர் வருமான வரிச் சலுகை பெறும் வகையில் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 100, 500, 1,000, 5,000 மற்றும் 10,000 என தொகையை முதலீடு செய்யலாம். இதற்கு 8.5 சதவிகிதம் ஆண்டு வருமானம் (ஐந்தாண்டுகளுக்கானது), 8.8% (10 ஆண்டுகளுக்கானது) வழங்கப்படுகிறது.  இத்திட்டம் வழங்கும் சான்றிதழைக்கொண்டு மிக எளிதாக வங்கிகளில் கடன் பெறலாம். இத்திட்டத்தில் செய்யும் முதலீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்.சி.எஸ்.எஸ்)!
60 வயதான எந்த ஓர் இந்தியரும் இந்த கணக்கைத் தொடங்கலாம். விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற 55 வயது நிரம்பியவர்களும் ஓய்வுபெற்ற தொகை கிடைத்த ஒரு மாதத்திற்குள் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.  இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும், மன்த்லி இன்கம் ஸ்கீம் மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்  போன்ற திட்டங்கள் மூத்தக் குடிமகன்களுக்கு மிகவும் பலனளிக்கும்.
1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்திற்கு வட்டி 9.2%. முதிர்வு அடைவதற்கு முன்னர் பணத்தை எடுத்தால்,  ஒரு வருடத்திற்கு பின் என்றால் 1.5 சதவிகிதமும், இரண்டு வருடத்திற்கு மேல் என்றால் ஒரு சதவிகித வட்டியும் குறைத்து கணக்கிட்டு வழங்கப்படும். இந்த முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி ஓர் ஆண்டில் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வரிப் பிடித்தம் செய்யப்படும்.
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்! (பி.பி.எஃப்.)
இத்திட்டம் மாத வருமானம் வாங்குவோருக்கும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் ஏற்ற மிகச் சிறந்த திட்டமாகும். 15 ஆண்டுகள் என்கிற கணக்கில் நீண்ட காலத்திற்கு இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதற்கு 8.7 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும், இதில் இருந்துவரும் வட்டிக்கு வரிச் செலுத்த தேவையில்லை. இந்த முதலீட்டிற்கும் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு.
இத்திட்டத்தை 15 ஆண்டுகள் தொடர வேண்டும். ஏழு ஆண்டு முதலீட்டிற்கு பிறகு  பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் முதலீடு தொடர்ந்திருந்தால் இதன் மூலம் கடன் பெற முடியும். இந்த முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர விரும்புபவர்கள் முதிர்வுக்குப் பின்  ஓராண்டுக்குள் தெரியப்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகள் அப்படியே இந்த முதலீட்டை தொடர ஏற்பாடு செய்து தரப்படும்.
பணம் செலுத்தும் முறை!
சேமிப்பு கணக்கை எங்கு தொடங்கி இருக்கி றோமோ அங்குதான் சேமிப்பு கணக்குக்கான தொகையைச் செலுத்தவேண்டும். பணமாகவோ, காசோலை மூலமாகவோ, டி.டி. மூலமாகவோ செலுத்தலாம். எல்லா சேமிப்பு கணக்கை தொடங்கும்போதும் கணக்காளரின் சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், புகைப்படச் சான்றுகளான பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களாக இருந்தால் அவர்களின் கல்வி நிறுவனம் வழங்கி இருக்கும் ஐடி கார்டு போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம்.
முகவரி சான்றுகளான பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, மின்சார கட்டணம் செலுத்தும் ரசீது, முகவரியுடன் கூடிய சம்பள படிவம், தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்கான ரசீது போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். முகவரி சான்றிதழ்களில் தற்போது எங்கு குடியிருக்கிறோமோ, அந்த முகவரி இருப்பது நல்லது.
நாமினி( Nominee) நடைமுறைகள்!
மற்ற சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்களில் இருக்கும் நாமினி (Nominee) சம்பந்தப்பட்ட நடைமுறைகள் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கும் உண்டு. சமர்ப்பிக்கும் நாமினி பற்றிய விவரங்கள் முறையானதாகவும், சரியானதாகவும் இருந்தால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் அசம்பாவிதத்திற்கு பிறகு நாமினிக்கு அந்தப் பணம் விரைவில் கொடுக்கப்படும்.
மேற்கூறிய திட்டங்களில் இணைந்து, அதிலிருந்து வரும் வட்டியை, சேமிப்பு கணக்கின் மூலம் ரெக்கரிங் டெபாசிட் கணக்கிற்கு ( 8.3 % வட்டி) மாற்றினால் கூடுதல் வட்டி பெறலாம்' என்று முடித்தார்.
ரிஸ்க் இல்லாத, அதிக பாதுகாப்பு கொண்ட அதே சமயத்தில், வருமானமும் தருகிற
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களிலும் தங்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு பகுதியை வைத்துக்கொள்ளலாமே!

Monday, August 26, 2013

ஆதார் அடையாள எண் என்றால் என்ன? அந்த எண்ணால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?

ஆதார் அடையாள எண் என்றால் என்ன? அந்த எண்ணால் நமக்கு ஏற்படும் பயன் என்ன? அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற சந்தேகங்கள் நம்மில் பலருக்கு உண்டு. அவைகளை தீர்க்கும் அடிப்படை தகவல்கள் இதோ உங்களுக்காக.
ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது இது குறித்த சந்தேகங்கள், இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது. இதனால் மக்கள் மத்தியில் இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார் எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் கேட்டது புதிய தலைமுறை நாம் கேட்ட கேள்விகளும் அதிகாரிகளின் பதில்களும்
எதற்காக ஆதார் எண் ?

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியோடு இந்த முறை தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. நமது பெயர் மற்றும் விவரங்களை தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் முயற்சியின் இறுதி வடிவம் ஆதார் எண் என்கிற பிரத்யேக அடையாள எண்.

என்ன என்ன விவரங்களை தர வேண்டும் ?

பெயர் ,குடும்பத்தலைவர் உடனான உறவு ,பாலின வகை,பிறந்த தேதி, திருமண நிலை, கல்வித் தகுதி, தொழில், தந்தை ,தாய் ,துணைவரின் முழுப்பெயர்,பிறந்த இடம், நாடு, தற்போதைய முகவரி,தற்போதைய முகவரியில் வசித்து வரும் ஆண்டுகள்,நிரந்தர வசிப்பிட முகவரி என மொத்தம் 14 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்

வேறு தகவல்கள் என்ன ?


ஒவ்வொரு மனிதனின் biometric அடையாளம் எனப்படும் பண்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஒவ்வொருவரின் புகைப்படம், கைவிரல் ரேகைகள், விழி திரையின் பதிவு ஆகியவை அடங்கும் மற்றவர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கும் அடையாளங்கள் பதிவு செய்யப்படும், என்ன குறைபாடு உள்ளதோ அதுவும் பதிவேட்டில் இடம்பெறும்

ஆதார் எண் எப்படி வழங்கப்படும் ?
அனைத்து தகவல்களும் இந்திய அரசின் பிரத்யேக அடையாள எண் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தனிநபருக்கான பிரத்யேக எண் வழங்கப்படும். இந்த எண் குறித்த விபரம் அஞ்சல் வழியாகவோ அல்லது செல்பேசி மூலமாகவோ ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தப்படுத்தப்படும்.

முகாம்கள் எங்கு நடைபெறுகின்றன ?
தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், கிராம ம் என அனைத்து பகுதிகளிலும் ஆதார் எண் தகவல் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது. நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலமாக அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம்

முகாம்களை தவற விட்டவர்கள் என்ன செய்யலாம் ?
தங்கள் பகுதி முகாம்களை தவறவிட்டோர், புதியதாக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ,மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் அக்டோபர் மாதம் அமைக்கப்பட உள்ள நிரந்தர மையங்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம். தகவல்களில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். மேலும் ஆதார் எண் இருந்தால் தான் அனைத்து அரசு சலுகைகளையும் பெற முடியும் என்பன போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்கின்றனர் அதிகாரிகள்.
ஐந்து வயதுக்கு மேல் உள்ள அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவருக்கே ஆதார் எண் வழங்கப்படும்.

Courtesy: Puthiya Thalaimurai

Tuesday, May 28, 2013

MY STAMP SCHEME - INDIAPOST

என் தலை... அஞ்சல் தலை!
ஞ்சல் தலைகளைச் சேமிப்பது  சுவாரஸ்யமான கலை. ஒரு நாட்டின் தலைவர்கள், கலாசாரம், பழக்க வழக்கங்கள், வரலாறு போன்றவற்றை அறியவும் தூண்டுகோலாக விளங்குகிறது.
 நமது நாட்டின் அஞ்சல்தலைகளை யோசித்துப்பாருங்கள், காந்தி, நேதாஜி, நேரு, இந்திரா காந்தி, அண்ணா என நீண்டு செல்லும் அந்தப் பட்டியலில் உங்கள் படமும் இடம்பெற்றால் எப்படி இருக்கும்?
'மிகப் பெரிய சாதனைகள் செய்தவர்களும் தலைவர்களும் மட்டுமே இடம்பெற்ற அஞ்சல்தலையில் இனி,  நமது  படமும் அச்சிடப்படும். அதை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழலாம்.
உங்களுடைய படம் மட்டுமல்லாது; நீங்கள் வரைந்த ஓவியங்கள், எடுத்த படங்கள் போன்றவற்றையும் தபால்தலையாக அச்சிட்டு வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பெயர், 'என் அஞ்சல்தலை’(MY STAMP).
எனது அஞ்சல் தலை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறப்பு தபால்தலை சேகரிப்பு மையங்களில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் இருந்து வாடிக்கையாளர்களின் புகைப்படம் ஒட்டிய தபால் தலைகள் தயாரிக்கப்பட்டு அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் தபால் தலை அனுப்பி வைக்கப்படும். இதில் ரூ.300-க்கு 12 அஞ்சல் தலைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, பின்னர் இதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால்நிலையங்களில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு, ஜம்மு, புனே, கோழிக்கோடு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இது படிப்படியாக மற்ற ஊர்களிலும் செயல்படுத்தப்படும் என இந்திய அஞ்சல் துறை அறிவித்து இருக்கிறது. மே 3-ம் தேதி சென்னையில் இந்தத் திட்டம் அறிமுகமானது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, போலந்து போன்ற பல நாடுகளில் பல ஆண்டுகளாகவே இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
நமது படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகளால் என்ன பயன்?
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் தனிநபர் கடிதப் போக்கு வரத்துகள் குறைந்துவிட்டன. இந்தத் திட்டம் கடிதப் போக்குவரத்துகளை ஊக்குவிக்கும். உங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ அனுப்பும் கடிதத்தில் உங்கள் படம் அச்சிடப்பட்ட அஞ்சல்தலை ஒட்டப் பட்டு இருந்தால், அதைப் பார்ப்பவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?
நீங்கள் அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கம்கொண்டவராக இருந்தால், உங்களுடைய ஆல்பத்தில் உங்கள் முகம்கொண்ட அஞ்சல்தலையும் இருக்கும். உங்கள் நண்பர்களின் சேமிப்பிலும் இடம்பெறலாம்.
ஃபேமிலி ட்ரீ எனப்படும் குடும்ப வரைபடம் தயாரிக்கும்போது, உங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் படங்களும் அச்சிடப்பட்ட அஞ்சல்தலைகளை அதில் ஒட்டி அசத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-2854 3199 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, என் அஞ்சல் தலை திட்ட தகவல்களை பெறலாம்.

Courtesy: Vikatan

Tuesday, May 7, 2013

National Child Award for exceptional achievement


INDIA POST
FROM
Supdt of Post Offices
Pudukkottai Division
Pudukkottai-622001

TO
The Postmaster Pudukkottai/All SPMs in Pudukkottai Division (B.Os may be informed through B.O slip).ASP/IPS in Pudukkottai Division.

CPT/WLF/ 01-13/13-14 dated at Pudukkottai -622001 the 3.05.2013.

               Sub: National Child Award for exceptional achievement  for the year  2013-14-reg
              Ref: R.O letter   WLF/331-01/2012/TR dated 01.05.2013.
                               
                                              A gist of copy of the joint secretary,Ministry of Women and child development letter no 11-3/2012-CW-1 dated 01.04.13 communicated vide Dte letter no 76-01/2013-Wl/Sports dated 23.4.13 further communicated vide  C.O letter no WLF/332-2/2013 dated 29.04.13 received from R.O letter no WLF/331-01/2012/TR dated 01.05.13 is  furnished below for information and necessary action.
                                                         The Nomination if any should reach this office on or before 08.05.2013 for onward transmission to C.O.If no report received from your end  on the due date the report may be taken as NIL and report furnished to C.O.

1.     The award will be Known as NATIONAL CHILD AWARD  FOR EXCEPTIONAL ACHIVEMENT

2.     ELIGIBILITY : Children Between 4 to 15 Years who have shown in exceptional achievement in any field including academics,arts and culture and Sports etc. will be considered for this award.One Gold medal and 35 silver medals (one for each state/U.T) are to be given annually.

3.     NATURE OF AWARD :
The award for the child with exceptional achievement shall consists of
(A)       GOLD MEDAL-01
(i)               Cash prize of Rs.20000/- (ii) Citation and Certificates and (iii) Gold Medal.
(B)       Silver medals-35
(i)               Award Money @Rs.10000 for each awardee (ii) Citation and certificate for each awardee(iii) Silver medal for each Awardee

4.     SELECTION COMMITTEE :

5.      A National selection committee out of the cases recommended by various bodies will make the selection.
RECOMMENDING AUTHORITY :
The application should be recommended by state/UT deptts,any Dept of Gove of India/District authority,local self government,Experts in the field ,M.P,M.L.A and reputed voluntary organizations.

6.CRITERIA FOR SELECTION :
(i)               The child is to be selected for the award should unusual talent and exceptional achievement in any field including academics arts culture and Sports etc.

(ii)            Age certificate (DOB) duly attested by a Gazetted Govt office  may be attached.
(iii)          Tribute/Traits which are claimed to be possessed by the child extraordinary or exceptional should be reported in the press, or have been tested by experts in the field. It should also be possible to subject the claim to an objective test.

7.DATE OF AWARD :
The award will be announced on 14th November each year and will be givenaway in NEW DELHI on a date and time convenient to the Minister for Women &Child Development.The child will receive the award personally.The Ministry of Women &Child Development will pay the awardee and his/her guardian/escort (Max-2)expenditure involved in travelling and daily allowances as per Rules. Prescribed Application is enclosed.

                The contents of above award should be brought to the notice of all concerned including those on leave/Deputation etc.

Supdt of Post Offices
Pudukkottai Division
Pudukkottai-622001