எட்டு மணி நேரம் எரியக்கூடிய சூரியஒளி விளக்குகள் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் சூரிய ஒளி விளக்குகள் விற்பனை நேற்று துவங்கியது. கோட்டக் கண்காணிப்பாளர் செல்வராணி அவர்கள் துவக்கி வைத்தார். தலைமை அஞ்சல் அதிகாரி கண்ணன் வரவேற்றார்.
இந்த சூரிய ஒளி விளக்குகள் ,
* 8 மணிநேரம் ஒளி தரும் திறன் கொண்டது.
* மிதமான, அதிகமான என்று இரண்டு விதங்களில் வெளிச்சம் தரும்.
* 50 ஆயிரம் மணிநேரம் ஆயுள் உபயோகம் உண்டு. 6 மாத உத்தரவாதம் கொண்டது.
*விலை ரூ.549 ( எஸ்.10). குழந்தைகளின் வாட்டர்கேன் போன்ற வடிவமைப்பைக் கொண்ட இந்த விளக்கின் மேல்புறம் சோலார் பேனல் உள்ளது. சூரியஒளி மட்டுமல்லாது வெளிச்சம் மூலம் திறனேற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.
*3வது மாடியில் இருந்து விழுந்தாலும் உடையாத வகையில் பாலி கார்பனேட்டினால் செய்யப்பட்டுள்ளது.
*மழையில் நனைந்தாலும் துடைத்து விட்டுப் பயன்படுத்தலாம். சுவரில் பொருத்திக் கொள்ளவும், தொங்கவிட்டுக் கொள்ளவும், டார்ச் போல பிடித்துக் கொண்டு செல்லவும், சைக்கிளின் முகப்பில் பொருத்திக் கொண்டு செல்லும் வகையில் பலவித பயன்பாடுகளுடன் கூடிய கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது.
*எஸ்.250 வகை விளக்குகள் ரூ.1699/-க்கும் விற்பனை செய்யபடுகிறது.
*இவ்வகை விளக்குகளை மின்சாரம் மூலமும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். 2.5 ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுள் இருக்கும். பின்பு மாற்றிக் கொள்ளலாம்
*இவ்வகை விளக்குகளை மின்சாரம் மூலமும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். 2.5 ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுள் இருக்கும். பின்பு மாற்றிக் கொள்ளலாம்
நிகழ்ச்சியில் லலிதா(APM) , குமணன்(APM), ஸ்ரீதரன்(PRIP) , குமார் (ME), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment